தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Covid-19 India: ஓராண்டை நிறைவு செய்த தடுப்பூசி திட்டம் - சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை பாராட்டும் விதமாக மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

COVID vaccination drive
COVID vaccination drive

By

Published : Jan 17, 2022, 6:51 AM IST

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் என்ற நோக்குடன் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் ஓராண்டு நிறைவை பாராட்டும்விதமாக மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது குறித்து அமைச்சர் மான்டவியா, மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட ஓராண்டில் 156 கோடி டோஸ்கள் செலுத்தி சாதனை புரிந்துள்ளது.

இந்நிகழ்வை பெருமைப்படுத்தும் விதமாக, ஐசிஎம்ஆர் மற்றும் பாரத் பயோட்டெக் இணைந்து உருவாக்கிய உள்நாட்டு தடுப்பூசியை குறிக்கும் அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கனவான தற்சார்பு இந்தியாவை இது நனவாக்கியுள்ளது.

இதை சாதித்து காட்டிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். முதலில் தடுப்பூசி குறித்து சந்தேக உணர்வு மற்றும் அச்சம் காணப்பட்டாலும், பின்னர் திட்டப்பணியானது வேகமெடுத்து முன்னேற்றம் கண்டுள்ளது. 70 விழுக்காடு வயது வந்தோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும், 93 விழுக்காடு வயது வந்தோர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர் என்றார்.

இந்தியாவில் இதுவரை சுமார் 157 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 91 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 65 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம் 23 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி முதலிடத்திலும், 14 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 8.98 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:குளிர் காலத்தில் சருமம் ஜொலிக்க வேண்டுமா...? இது மட்டும் போதும்

ABOUT THE AUTHOR

...view details