ராஜஸ்தான்: ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமி (7) ஒருவரை, அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் விளையாடப்போவதாக கூறி கிணற்றுக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் பாலியல் வன்கொடுமை குறித்து வெளியில் கூறினால், சிறுமியின் தாய் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் சிறுமி பெற்றோரிடம் கூறவில்லை. சில நாட்களுக்குப் பிறகு சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்தும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அச்சமடைந்த சிறுமி உண்மையை பெற்றோரிடம் கூறியுள்ளார்.