பாகிஸ்தான்:கைபர் பக்துன்க்வா சித்ரால் மாவட்டத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த கடுமையான துப்பாக்கி சூட்டில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 6க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயங்களுடன் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு படையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் ஆதரவு அளித்து வருவதுடன், நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வருகின்றனர். மேலும் கைபர் பக்துன்க்வா பகுதியில் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால், குற்ற விகிதங்கள் அதிகரித்து வருவதாக" தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, கடந்த புதன்கிழமை சித்ரால் மாவட்டதிற்கு அருகே உள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் ரானுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையின் போது 4 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து பாகிஸ்தான் மக்கள் தொடர்புத் துறை அளித்த தகவலின் படி, அதிநவீன ஆயுதம் ஏந்திய பயங்கரவாத கும்பல் இரண்டு ராணுவ சோதனைச் சாவடிகளைத் தாக்கி உள்ளது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தான் மற்றும் குனார் மாகாணங்களில் பயங்கரவாத நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்தது.
இதையும் படிங்க:வி.கே.குருசாமி தாக்குதல் வழக்கு: மதுரையில் ஒருவரை கைது செய்த பெங்களூரு போலீசார்