பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா (koramangala) பகுதியில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஆடி கார் (audi car) , மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று பெண்கள் உள்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
காரின் முன் இருக்கையில் மூன்று பேரும், பின் இருக்கையில் நான்கு பேரும் அமர்ந்திருந்ததாகத் தெரிகிறது.