ஜெய்ப்பூர்: நியூல்பூர் அருகே கோழி ஏற்றி வந்த மினி டிரக்கும், பயணிகள் வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு வங்காளத்தில் இருந்து பயணிகள் வாகனத்தில் ஒரு குழு, ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது.
அதேபோல் எதிர்புறம் கொல்கத்தாவில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு மினி டிரக் ஒன்று, வந்துள்ளது. நியூல்பூர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மினி டிரக், எதிர்திசையில் வந்த பயணிகள் வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணிகள் வாகனத்தில் வந்த 6 பேர் சம்பவ இடத்ததிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.