தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில் சாலை விபத்து: 7 பேர் மரணம்! - lucknow accident news

லக்னோ: யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (பிப். 24) அதிகாலையில் காரும் எண்ணெய் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

யமுனா நெடுஞ்சாலை  விபத்து
யமுனா நெடுஞ்சாலை விபத்து

By

Published : Feb 24, 2021, 10:24 AM IST

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், லக்னோவில் உள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (பிப். 24) அதிகாலையில் காரும், எண்ணெய் டேக்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்தக் கோர விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மதுரா மாவட்டத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) கவுரவ் குரோவர் தெரிவித்தார்.

யமுனா நெடுஞ்சாலை விபத்து

மேலும், சடலங்களின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: கார் விபத்தில் இருவர் உயிரிழப்பு: சாலையில் சிதறிய 1 கோடி ரூபாய் நகைகள்

ABOUT THE AUTHOR

...view details