டெல்லி: சமுத்ர சேது 2 திட்டத்திற்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த 7 கப்பல்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
சமுத்ர சேது 2 திட்டத்திற்காக ஏழு கடற்படை கப்பல்கள் இணைப்பு! - ஐ என் எஸ் கொல்கத்தா
கொல்கத்தா, கொச்சி, தல்வார், தபார், திரிகண்ட், ஜலாஷ்வா மற்றும் ஐராவத் ஆகிய ஏழு இந்திய கடற்படைக் கப்பல்கள் பல்வேறு நாடுகளிலிருந்து திரவ மருத்துவ பிராணவாயு நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் கொள்கலன்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவ உபகரணங்களை கொண்டு வருவதற்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
பாரசீக வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்ட ஐ.என்.எஸ் கொல்கத்தா, ஐ.என்.எஸ் தல்வார் கப்பல்களுக்கு உடனடியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, ஏப்ரல் 30 அன்று பஹ்ரைனின் மனாமா துறைமுகத்திற்குள் நுழைந்தன. இதில் ஐ.என்.எஸ் தல்வார், 40 மெட்ரிக் திரவ மருத்துவ பிராணவாயுவை ஏற்றி நாடு திரும்பியது.
இதேபோல பல நாடுகளுக்கு அருகில் இருக்கும் இந்திய கப்பற்படை கப்பல்கள் திசைத்திருப்பப்பட்டு அங்கிருந்து மருத்துவ உபகரணங்கள், பொருட்கள் ஆகிவற்றை இந்தியா கொண்டு வர அவசர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.