இந்தூர் (மத்தியபிரதேசம்): மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரின் சுவர்ணா பக் காலணி குடியிருப்பில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தூர் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் வீடுகளில் குறைந்த மின்னழுத்ததால் தீ விபத்து உண்டாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இந்தூர் காவல் ஆணையர் ஹரிநாரயணன் கூறுகையில், ‘ விபத்தில் 7 பேர் உடல் கருகி இறந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீயை அணைக்க 3 மணி நேரம் போராட வேண்டியிருந்தது" என தெரிவித்தார்.