புதுடெல்லி: 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (Union Public Service Commission - UPSC) நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வு (Civil Services Examinations) முடிவுகள் இன்று (மே 30 ) வெளியாகின. இந்தத் தேர்வில், ஸ்ருதி ஷர்மா, அங்கிதா அகர்வால் மற்றும் காமினி சிங்லா ஆகியோர் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ரேங்க் பெற்றுள்ளனர்.
மேற்படி, தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படாத நிலையில் மொத்தமாக 685 பேர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களில் 244 பேர் பொதுப் பிரிவினரும், 73 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும், 203 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், 105 பட்டியல் சாதியினரும், 60 பேர் பழங்குடியினரும் ஆவார்கள்.
இந்திய நிர்வாகப் பணி (IAS), இந்திய வெளியுறவுப் பணி (IFS) மற்றும் இந்தியக் காவல் பணி (IPS) உள்ளிட்டவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களுக்கு பூர்வாங்க, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளில் UPSC ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்துகிறது. தேர்வு எழுதப்பட்ட அல்லது முக்கிய பகுதி ஜனவரி, 2021இல் நடத்தப்பட்டது, மேலும் நேர்காணல் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்டது. 80 வேட்பாளர்களின் வேட்புமனு தற்காலிகமானது, ஒரு வேட்பாளரின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.