தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Operation Kaveri: சூடானில் இருந்து 1,100 இந்தியர்கள் மீட்பு - மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்! - indians evacuate in sudan

சூடானில் இருந்து இதுவரை 6 பகுதியாக ஆயிரத்து 100 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்து உள்ளார்.

Operation Kaveri
Operation Kaveri

By

Published : Apr 27, 2023, 8:34 AM IST

டெல்லி : சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நடைபெறும் உள்நாட்டு போரால் சிக்கி உயிர் தப்ப போராடி வரும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி திட்டத்தின் மூலம் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு வசதியாக மத்திய வெளியுறவு அமைச்சகம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டுப்பாட்டு அறை அமைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து 72 மணி நேர போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த நேரத்தில் சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. அவ்வகையில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா போர்க் கப்பலும், விமானப் படையின் இரண்டு C130J வகை போர் விமானமும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

முதற்கட்டமாக சூடானில் இருந்து மீட்கப்பட்ட 278 இந்தியர்கள் கொண்ட முதல் குழு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் ஜெட்டா வந்தடைந்தது. மேலும் இந்திய விமானப் படையின் இரண்டு விமானங்கள் மூலம் 250 இந்தியர்கள் இரண்டாவது கட்டமாக மீட்கப்பட்டனர். அந்த இரண்டு விமானங்களில் முறையே 121 பேர் மட்டும் 135 பேர் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுவரை சூடானில் இருந்து ஆறு தொகுதியாக ஆயிரத்து 100 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்து உள்ளார். தொடர்ந்து சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்

இதனிடையே ஜெட்டா நகரில் இருந்து மக்களை இந்தியாவுக்கு இடம் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜெட்டா துறைமுகத்தில் இருந்து இந்திய கடற்படை விமானம் மூலம் 360 பேர் தலைநகர் டெல்லியை வந்து சேர்ந்ததாக மத்திய வெளியறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Arindham Bagachi twitter

சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ள அங்கிருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள், ஐநா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா எகிப்து மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவை தொடர்ந்து அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் சூடானில் சிக்கி உள்ள அந்நாட்டு மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

இதையும் படிங்க :கேரளா வந்தே பாரத் ரயிலில் கொட்டித் தீர்த்த கனமழை! பயணிகள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details