புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று(ஏப்ரல்.6) காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 10 லட்சத்து 4 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் சுயேச்சை உட்பட 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 635 இடங்களில் 1,558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 6 ஆயிரத்து 835 பேர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் காலைமுதல் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
பாதுகாப்பிற்காக வாக்குச்சாவடிகள் அனைத்திலும் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினரும், 40 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 74.52 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.