கைமூர்: பீகார் மாநிலம், கைமூர்(Kaimur) மாவட்டத்தை சேர்ந்தவர் 65 வயதான ஆசிரியர் நாவல் கிஷோர் பாண்டே. தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சனிக்கிழமையன்று சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த ஆசிரியர் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது.
ஆசிரியர் நாவல் கிஷோர் சாலையில் விழுந்ததால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. போக்குவரத்து பாதிப்பால் ஆத்திரமடைந்த பெண் காவலர்கள் வயதான நபர் என்றும் பாராமல் நாவல் கிஷோரை லத்தியை கொண்டு கொடூரமாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் அவர் கத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.