டெல்லி: கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்து மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் முன்னின்று போராடிவருகின்றனர். இதற்கு மத்தியில் கோவிட் இரண்டாம் அலையில் சிக்கி நாட்டில் இதுவரை 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 32 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்தத் அதிர்ச்சி தகவல் இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association (IMA) வெளியிட்டுள்ள புள்ளிவிவர குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைநகர் டெல்லியில் அதிகபடியாக 109 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில்,
எண் | மாநிலம் | உயிரிழப்பு |
01 | டெல்லி | 109 |
02 | பிகார் | 97 |
03 | உத்தரப் பிரதேசம் | 79 |
04 | ராஜஸ்தான் | 43 |
05 | ஜார்க்கண்ட் | 39 |
06 | குஜராத் | 37 |
07 | ஆந்திரா | 35 |
08 | தெலங்கானா | 34 |
09 | தமிழ்நாடு | 32 |
10 | மேற்கு வங்கம் | 30 |
11 | மகாராஷ்டிரா | 23 |
12 | ஒடிசா | 23 |
13 | மத்தியப் பிரதேசம் | 16 |
14 | கர்நாடகா | 09 |
15 | அஸ்ஸாம் | 08 |
16 | சண்டிகர் | 05 |
17 | மணிப்பூர் | 05 |
18 | கேரளம் | 05 |
19 | ஜம்மு காஷ்மீர் | 03 |
20 | பஞ்சாப் | 03 |
21 | ஹரியானா | 03 |
22 | திரிபுரா | 02 |
23 | உத்தரகண்ட் | 02 |
24 | கோவா | 02 |
25 | புதுச்சேரி | 01 |
மேலும் ஒரு மருத்துவர் எங்கு இறந்தார் என அடையாளம் காண முடியவில்லை. நாட்டில் கோவிட்-19 பரவல் முதல் அலையின்போது 748 மருத்துவர்கள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களில் மருத்துவர்களின் மரணங்கள் பெருமளவு அதிகரித்துள்ளன. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 529 கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.