மும்பை:புனேவில் உள்ள மிகப் பழமைவாய்ந்த சாந்தினி சௌக் பாலம் நாளை (அக்டோபர் 2) அதிகாலை தகர்க்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும், தொழில்நுட்ப குழுவும் செய்து முடித்துள்ளது. மேலும் இன்று காலை 10 மணிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
600 கிலோ வெடிபொருளில் 6 வினாடிக்குள் தகர்க்கப்படும் பாலம் - சாந்தினி சௌக் பாலம் இடிப்பு
புனேவில் உள்ள சாந்தினி சௌக் பாலம் நாளை அதிகாலை தகர்க்கப்படவுள்ளது.
சாந்தினி சௌக் பாலம்
மும்பையில் இருந்து சதாரா செல்லும் வாகனங்களுக்கும், சதாராவில் இருந்து மும்பை செல்லும் வாகனங்களுக்கும், புனே நகருக்கு வரும் வாகனங்களுக்கும் போக்குவரத்து நெரிசல் பெரும் சுமையாக இருந்தது. இந்நிலையில், பழைய பாலத்தை இடித்து, புது பாலம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. மேலும் அந்த பாலத்தில் துளைகள் இடப்பட்டு, 600 கிலோ வெடிபொருள்கள் நிரப்பப்பட்டுள்ளது. இவை நாளை (அக்டோபர் 2) அதிகாலை தகர்க்கப்பட்வுள்ளது.
இதையும் படிங்க: கேதார்நாத்தில் மிகப்பெரும் பனிச்சரிவு... கோயிலுக்கு சேதமில்லை...