தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.60 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்: இது டெல்லி சிறப்புப் படையின் அதிரடி நடவடிக்கை! - 60 crores worth drugs seized

டெல்லி காவல் துறையின் சிறப்புப் படை நடத்திய அதிரடி சோதனையில், 60 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

special force
சிறப்புப் படை

By

Published : Mar 18, 2021, 8:10 PM IST

டெல்லியில் அதிகளவில் போதைப்பொருள் விநியோகம் நடப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், சிறப்புப் படை ஒன்றை அமைத்து தீவிரமாகக் கண்காணிப்புவந்தனர்.

இந்நிலையில், ஹப்பூர் பகுதியில் போதைப்பொருள் விநியோகம் குறித்த தகவல் சிறப்புப் படைக்கு கிடைத்துள்ளது. அதன்பேரில், அங்கு வசிக்கும் ஷாஜாத், அமீர் ஆகியோரது வீட்டில் சோதனை நடத்தினர்.

மேலும், அவர்கள் வாகனங்களில் மறைத்து வைத்திருந்த, 15 கிலோ போதைப்பொருள்களைப் பறிமுதல்செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் 60 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருவரையும் கைதுசெய்த சிறப்புப் படை, தீவிர விசாரணை நடத்திவருகின்றது.

இதையும் படிங்க:சமூக ஊடகங்களில் ஆண்களை அச்சுறுத்திய கும்பல் கைது!

ABOUT THE AUTHOR

...view details