தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

6 வயது சிறுமிக்கு கெளரவ டாக்டர் பட்டமளித்த தமிழ் பல்கலைக்கழகம்

கர்நாடக மாநிலம் தார்வாடைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஸ்ரீஷா மடகன்னவருக்கு, பொது அறிவில் சிறந்து விழங்கியதற்காக, தமிழ்ப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டமளித்து கெளரவித்துள்ளது.

6 வயது சிறுமி ஸ்ரீஷா
6 வயது சிறுமி ஸ்ரீஷா

By

Published : Sep 25, 2021, 9:31 AM IST

தார்வாட் (கர்நாடகம்):ஸ்ரீஷா மடகன்னவருக்கு (6), பொது அறிவில் சிறந்து விழங்கியதற்காக, தமிழ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டமளித்து கெளரவித்துள்ளது.

இவர், குந்தகோலா நகரத்தைச் சேர்ந்த ஈஸ்வர் முதகன்னவர், கீர்த்தி முதகன்னவர் ஆகியோரின் மகளாவார். இவர் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தனது ஞாபக சக்தி திறனால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

மறைந்த நடிகர் ராஜ்குமாரின் (சாண்டல்வுட் சினிமா மூலம் புகழ்பெற்ற நடிகர்) 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் தலைப்புகளை 3 நிமிடங்களில் இவரால் சொல்ல முடியும். இதை பார்த்த பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் (கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன்) அவரை பாராட்டியுள்ளார். அவர் அந்தப் பெண்ணைச் சந்தித்து அவளுடைய எதிர்கால சாதனைகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்த பெண் ஏற்கெனவே நிறைய சாதனைகளை நிகழ்த்திவிட்டார். இவர், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், பிரத்யேக உலக சாதனை, கர்நாடக சாதனை புத்தகம், எதிர்கால கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், தி யுனிவர்ஸ் சாதனையாளர்கள் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பிடித்துள்ளார்.

டாக்டர் பட்டம் பெற்ற சிறுமி ஸ்ரீஷா

"அவள் வாசிப்பதில் மிகவும் திறமையானவள். இதைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம். அவளால் எல்லாவற்றையும் எளிதில் நினைவில் வைத்துகொள்ள முடிகிறது. நான் அவளுக்கு வீட்டில் கற்பிக்க முடிவு செய்தேன். அவள் 6,000 கேள்விகளுக்கு ஒரே நேரத்தில் எந்த உதவியும் இல்லாமல் பதிலளிக்க முடியும். அவள் இன்னும் நிறைய சாதிப்பாள் என்று நாங்கள் நம்புகிறோம்" என சிறுமியின் தாய் கீர்த்தி கூறினார்.

இதையும் படிங்க:ஷாக் கொடுத்த சீனா - மெய்நிகர் பண வர்த்தகத்திற்கு தடை

ABOUT THE AUTHOR

...view details