தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆறு மாநிலங்களில் தீவிரமடையும் கரோனா - மத்திய அரசு

இந்தியாவில் ஆறு மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துவருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Union Health Ministry
Union Health Ministry

By

Published : Mar 7, 2021, 3:35 PM IST

நாட்டின் கோவிட்-19 பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 18,711 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது, ஆயிரத்து 873 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, நாட்டின் மொத்த கோவிட்-19 பாதிப்பு ஒரு கோடியே 12 லட்சத்து 10 ஆயிரத்து 799ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 756ஆக உயர்ந்துள்ளது.

புதிய பாதிப்புகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,187 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக கேரளாவில் 2,791 பேரும், பஞ்சாப்பில் 1,159 பேருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்பு தீவிரமடைந்துவருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு குறைந்துவந்திருந்த நிலையில், கடந்த 10 நாட்களாக தொடர் உயர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இண்டிகோ மேலாளர் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details