பெலகாவி: கர்நாடக மாநிலம் ராமதுர்கா தாலுகாவுக்கு உட்பட்ட ஹுலகுண்டா கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் மினி சரக்கு வேன் ஒன்றில் எல்லம்மா கோயிலுக்கு சென்றுள்ளனர். வேன் சிச்சனூர் என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், ஹனமவ்வா மேகாதி (25), தீபா (31), சவிதா (12), சுப்ரீதா (11), மாருதி (43), இந்திரவ்வா (24) ஆகிய ஆறு பேர் உயிரிழந்தனர்.
கோயிலுக்கு சென்றபோது நிகழ்ந்த விபத்தில் 6 பேர் பலி! - பெலகாவி
கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே எல்லம்மா கோயிலுக்கு பக்தர்கள் சென்ற வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
a
மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கோகாக் உள்ளிட்ட அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக கடகோல காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பெண்களுக்கு மட்டும் பெட்ரோல் போடும் 'பிங் பம்ப்' திட்டம் புதுச்சேரியில் அறிமுகம்!