ராஜஸ்தான் மாநிலம், கான்பூர் மினாகிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கமாண்டி சிங். இவர் இன்று அதிகாலை தனது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, ஸ்ரீ பகவான், புஷ்பேந்திரா, மங்கல் சிங் உள்பட ஆறு பேர் ஒன்று சேர்ந்து கமாண்டி சிங்கை சரமாரியாகத் தாக்கி உள்ளனர்.
இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து அங்கு கமாண்டி சிங்கின் மகன் பானியா சிங் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.