இமாச்சலப் பிரதேச மாநிலம், கின்னௌரில் ஆகஸ்ட் 11ஆம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அரசுப்பேருந்து, சரக்கு வாகனம் உள்ளிட்டவைகள் சிக்கின.
கடந்த மூன்று நாள்களாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இன்னும் ஒன்பது பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்புப்பணியில் மாநில பேரிடர் மீட்புக்குழுவுடன், இந்தோ-திபெத் காவல் படை, தேசியப் பேரிடர் மீட்புக்குழுவும் ஈடுபட்டுள்ளது.