ஆந்திர பிரதேசம்:காக்கிநாடா மாவட்டம், தல்லாரேவு மண்டலம், சீதாராமபுரம் சுப்பராயுனிடிப்பா புறவழிச்சாலையில் இன்று (மே 14) ஆட்டோவில் ஏறிய பயணிகளை சாலையோரமாக இறக்கிவிட்டு ஆட்டோ ஓட்டுநர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் ஆறு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதனைக் கண்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களது சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.