தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாராயணசாமி வீடருகே பைப் வெடிகுண்டு; 6 பேருக்கு சிறை - தேசிய புலனாய்வு அமைப்பு

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கில் 5 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சிறை தண்டனை
சிறை தண்டனை

By

Published : Feb 5, 2022, 10:36 AM IST

புதுச்சேரி:முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் வீடு எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ளது. இவர் வீட்டின் முன்பு 2014ஆம் ஆண்டு ஜன.29ஆம் தேதி பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில், தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த் திருச்செல்வம், தமிழரசன், தங்கராசு, காளிலிங்கம், ஜான்மார்ட்டின், கார்த்திக் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு தமிழ்நாடு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பான வழக்கு, புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் 80க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இருதரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்துச் சிறப்பு நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:'இலவு காத்த கிளி யார்?'-ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மசோதாக்கள்

ABOUT THE AUTHOR

...view details