டெல்லி:ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்க ஐந்து நாடுகளில் இருந்து ஐந்தாயிரத்து 805 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா வரும் 5,805 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன்! - oxygen supply in India
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க ஐந்து நாடுகளில் இருந்து 5,805 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ள உள்துறை அமைச்சகம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பிரான்ஸ், சிங்கப்பூர், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து திரவ மருத்துவ ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ”பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ஒரு லட்சம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கப்படும். ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆயிரத்து 619 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் இப்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன” எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.