கொல்கத்தா:மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதி நடந்துமுடிந்துள்ளது. இந்நிலையில், காவலர்கள் கன்டிபோட்டா பகுதியிலுள்ள பெரி பகுதியில் தீவிர சோதனை நடத்தினார்கள்.
அப்போது வெடிகுண்டு ஒன்று சிக்கியது. இதையடுத்து காவலர்கள் நடத்திய விசாரணையில் நரேந்திரபூரில் 56 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தக் குண்டுகள் வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்க செய்யப்பட்டன. இது தொடர்பாக காவல் உயர் அலுவலர் அலி மொல்லா கூறுகையில், “குட்டி மற்றும் அசனுல் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது விசாரணை நடத்திவருகிறோம்.