தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சர் சி.வி. ராமனின் 50ஆவது ஆண்டு நினைவு நாள்! - பாரத ரத்னா விருது வென்ற சி.வி.ராமன்

ராமன் விளைவை கண்டறிந்த சி.வி. ராமனின் 50ஆவது ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டுவருகிறது. நோபல் பரிசு, பாரத ரத்னா என ஏராளமான விருதுகளை வென்றவர்.

50th-death-anniversary-of-cv-raman-known-for-raman-effect
50th-death-anniversary-of-cv-raman-known-for-raman-effect

By

Published : Nov 21, 2020, 7:43 PM IST

சந்திரசேகர வெங்கட ராமன், சுருக்கமாக சி.வி. ராமன். 1888ஆம் ஆண்டு நவ. 7ஆம் தேதி திருச்சியில் பிறந்தவர். இவரின் தந்தை கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்திற்கான விரிவுரையாளர். இதனால் சிறு வயது முதலே படிப்பில் ஆர்வமாக இருந்தார். இளம் வயதிலேயே கல்வியில் ஆளுமையாக திகழ்ந்தவர். 1970ஆம் ஆண்டு, நவ. 21ஆம் தேதி ராமன் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறையில் பணி செய்துகொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

13 வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்த இவர், மேல்படிப்பிற்காக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஏ.வி.என் கல்லூரிக்குச் சென்றார். அங்கிருந்து சென்னை பிரசிடென்சி கல்லூரிக்கு மாற்றமடைந்தார். 15 வயதிலேயே பி.ஏ. பட்டம் பெற்ற இவர், 18 வயதில் ஆங்கிலம் மற்றும் இயற்பியல் துறையில் எம்.ஏ பட்டத்தைப் பெற்றார்.

சி.வி. ராமனின் வாழ்க்கைப் பயணம்:

  • இந்திய கணக்கு மற்றும் தணிக்கை பிரிவில் பணிக்கு சேர்ந்த சி.வி. ராமன், நிதித்துறை உதவி கணக்காளராக கொல்கத்தாவில் நியமிக்கப்பட்டார்.
    சி.வி.ராமனின் பயணம் மற்றும் சாதனைகள்
  • கொல்கத்தாவில், விஞ்ஞான பயிர்ச்செய்கைக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் பணியாற்றியதன் மூலம் அறிவியலில் இருந்த ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொண்டார். அதேபோல் ஓய்வு நேரத்தில், இசைக்கருவிகள் மற்றும் இந்திய டிரம்ஸின் இயற்பியலையும் படித்து தெரிந்துகொண்டார்.
  • 1917ஆம் ஆண்டு அரசுப் பணியைத் துறந்த இவர், கொல்கத்தாவில் இருந்த சர் தரக்நாத் பலித் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் ஆசிரியராக சேர்ந்தார்.
  • அதன்பின்னர் அடுத்த 15 வருடத்தில், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆசிரியராக சேர்ந்தார். அதனைத்தொடர்ந்து 1948ஆம் ஆண்டில் ராமன் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக செயல்பட்டார். அதேபோல் இயற்பியலுக்கான இந்திய பத்திரிகையை 1926ஆம் ஆண்டு தொடங்கி, ஆசிரியராக செயல்பட்டார்.
    சி.வி. ராமனின் சாதனைகள்
  • அதிர்வு, ஒலி, இசைக்கருவிகள், அல்ட்ராசோனிக்ஸ், டிஃப்ராஃப்ரக்ஷன், ஒளிமின்னழுத்தம், கூழ் துகள்கள், எக்ஸ்ரே டிஃப்ராஃப்ரக்ஷன், மேக்னட்ரான் போன்ற துறைகளின் ஆராய்ச்சிக்கு மகத்தான பங்களிப்புகளைச் செய்தார்.

ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 28 அன்று 'ராமன் விளைவு' கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க:மக்களிடையே ஒற்றுமையை கற்பிக்கும் வகையில் கல்வி திட்டத்தில் மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details