தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திடீரென உயர்ந்தது வீட்டு உபயோக சிலிண்டரின் விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள் - 50 rupees increased for household cylinders

சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென உயர்ந்தது வீட்டு உபயோக  சிலிண்டரின் விலை- அதிர்சியில் இல்லத்தரசிகள்
திடீரென உயர்ந்தது வீட்டு உபயோக சிலிண்டரின் விலை- அதிர்சியில் இல்லத்தரசிகள்

By

Published : Jul 6, 2022, 8:17 AM IST

டெல்லி:இந்தியாவில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் எரிவாயு பொருள்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாகவே எரி பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இது நடுத்தர வர்க்கத்தினர், ஏழை எளிய மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் கடும் பொருளாதார நெருக்கடியை அளித்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 50 அதிகரிக்கப்படுகிறது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதற்கு முன், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் சென்னையில் 1,018 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 1,068 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ABOUT THE AUTHOR

...view details