புதுச்சேரி: அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இருந்தது. தொற்று குறைந்து வருவதால், கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதோடு, மேலும் ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவு வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது.
இதன்படி, தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் அமலில் இருக்கும்.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு தடை:
அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. அனைத்து அரசுத்துறை, தனியார் துறை அலுவலகங்கள் இயங்கலாம்.
அனைத்துவிதக் கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும்.
மதுக்கூடங்களுக்கு அனுமதி