தெலங்கானாமாநிலம் நாகர்குர்னூல் மாவட்டம், கோலாப்பூர் மண்டலத்தில் உள்ள ரெகுமானா கடா பகுதியில் பாலமுரு திட்டப் பணி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை பணி தொடங்கியபோது, கிரேன் உதவியுடன் பம்ப் ஹவுஸில் இறங்கும் போது, அதனுடன் தொடர்புடைய கம்பி அறுந்து விழுந்தது.
இதில் அங்கிருந்த ஐந்து தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் பலத்த காயம் அடைந்தார். உயிரிழந்தவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.