காஷ்மீர், சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்பேரில், காஷ்மீர் காவல் துறையும், பாதுகாப்புப் படையினரும் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்த பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளிடம் சரணடையுமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்! - காஷ்மீர் துப்பாக்கிச்சூடு
ஸ்ரீநகர்: பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
காஷ்மீர்
ஆனால், பயங்கரவாதிகள் வெளியே வர மறுத்ததாகத் தெரிகிறது. அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில், ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இறந்த பயங்கரவாதிகளின் விவரம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.