வாக்கு எண்ணிக்கை எப்போது?
காலை 8 மணி முதலே தபால் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்குகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 8.30 மணி முதல் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவையான விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முடிவுகளை எங்கே அறியலாம்?
தேர்தல் ஆணையத்தின் இணைய தளம் மற்றும் செயலியில் காலை 8 மணி முதலே வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியிடப்படும். இதுமட்டுமின்றி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி இணையதளத்திலும் முடிவுகள் உடனுக்குடன் வழங்கப்படயிருக்கின்றன. https://www.etvbharat.com/tamil/tamil-nadu ஈடிவி பாரத்தின் சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாகவும் நீங்கள் எங்கிருந்தாலும் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்: https://twitter.com/ETVBharatTN , https://www.facebook.com/ETVBharatTamilNadu/.