கடந்த சில தினங்களாகவே, ஜம்மு - காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை காஷ்மீரில் ஸ்ரீநகர்-சோன்மார்க் சாலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் அவ்வழியே வாகனங்களில் சென்ற 5 பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
சோஜிலா பாஸ் பனிச்சரிவில் சிக்கிய 5 பயணிகள் மீட்பு! - ஸ்ரீநகர்-சோன்மார்க் சாலை
லடாக்: சோஜிலா பாஸில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய ஐந்து பயணிகளை, எல்லை சாலை அமைப்பினர் (BRO) பத்திரமாக மீட்டுள்ளனர்.

லடாக்
சோஜிலா பாஸ் பனிச்சரிவில் சிக்கிய 5 பயணிகள் மீட்பு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எல்லைச் சாலை அமைப்பினர், பயணிகளைப் பத்திரமாக மீட்டனர். மேலும், பனியில் சிக்கியிருந்த வாகனங்களை அகற்றி போக்குவரத்தையும் சரிசெய்தனர். இந்த மாதத்தில்தான், சோஜிலா பாஸ் திறப்பு மற்றும் மூடலை நிர்வகிக்க நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. காஷ்மீர், லடாக், காண்டர்பால், கார்கில் பிரதேச ஆணையர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.