டெல்லி: கடந்த சில ஆண்டுகளாக நமது உணவு பழக்க வழக்கங்கள், நாம் வாழும் வாழ்க்கை நடைமுறைகளுடன் ஒத்துப்போகமால் உள்ளன. மேலும் நமது அன்றாட வாழ்க்கைக்கும் கூடுதலான தேவைகள் அதிகரித்துள்ளன. இதிலும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு இது அவசியமானது ஆகும். ஏனெனில் அவர்களின் வாழ்க்கையில் மனஅழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம், துரித உணவு, உடல் உழைப்பு இல்லாமை போன்றவை சாதாரணமான ஒரு நடைமுறையாக உருவாகி விட்டன.
இந்த நவீன வாழ்க்கை முறை பிரச்சினைகளை எதிர்த்துப் போராட, அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இருப்பினும் நமது அனைத்து ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒரு சில உணவுகள் மட்டும் போதாது. இதற்காக கூடுதல் ஊட்டச்சத்துக்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. ஆனால், பல சப்ளிமெண்ட்கள் இருப்பதால், சரியானவற்றை தேர்வு செய்ய உதவும் பட்டியல் இதோ.
மல்டிவிட்டமின்கள்(Multivitamins)
மல்டிவைட்டமின்கள் என்பது உடலுக்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்ட கூடுதல் சப்ளிமெண்ட்ஸ் ஆகும். நமது அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உணவில் இருந்து பெறுவது சிறந்தது என்றாலும், பலரால் தங்களது ஊட்டச்சத்து தேவைகளை உணவின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்ய முடியாது. எனவே மல்டிவி ட்டமின்கள் நமது உணவில் உள்ள ஊட்டச்சத்து இடைவெளிகளை நிரப்புகின்றன. நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
இதன் மூலம் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கிடைப்பதன் விளைவாக நம் உடலை நோய்கள் மற்றும் குறைபாடுகளிலிருந்து பாதுகாக்கலாம். மேலும் இதய நோயைக் குறைக்கவும், புற்றுநோயைத் தடுக்கவும், ஆரோக்கியமான உடல் நிலையை சீராக்கவும் உதவுகின்றன.
நமது தினசரி சவால்களை எதிர்கொள்ள தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வைட்டமின்கள் காரண்மாகும். இது போன்ற வைட்டமின்கள் ஆன்லைன் மூலமும், பல மருந்தகங்களிலும் ஏராளமாக உள்ளன. மல்டி வைட்டமின்கள் ஆண்கள் மற்றும் பெண்களின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
ஒமேகா 3
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியமான உடலை பராமரிக்க கூடிய முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இது நமது உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் விளைவாக ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் மற்றும் நலமான இதயம் சீராக செயல்படுகிறது. ஒமேகா-3 மூன்று கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. அவை அல்பலினோலினிக் அமிலம் (ஏஎல்ஏ), ஈகோசாபென்டெனோயிக் அமிலம் (இபிஏ) மற்றும் டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம் (டிஹெச்ஏ) ஆகியவைகள் ஆகும்.
ஒமேகா-3 நமது உடலால் உற்பத்தி செய்ய முடியாத ஒரு அத்தியாவசிய கொழுப்பு ஆகும். நமது உணவுதான் அதற்கு ஆதாரமாக உள்ளது. ஒமேகா -3 தேவைகளைப் பூர்த்தி செய்ய உணவு போதுமானதாக இல்லாத பட்சத்தில், மீன் எண்ணெய் போன்ற சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் ஒமேகா-3 இன் சத்தும், உடலுக்குத் தேவையான பிற ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவையும் நிறைந்துள்ளன.
நமது உடலில் போதுமான அளவு ஒமேகா-3 இருக்கும் போது சீரான சுவாசம், பாதிக்காத இருதய செயல்பாடு, நரம்பு மண்டலம் மற்றும் தசைக்கூட்டு ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் மனித உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையையும் இது மேம்படுத்துகிறது. கூடுதலாக ஒமேகா-3 கழுத்து மற்றும் கீழ் முதுகு வலியை நிவாரணம் அடையச் செய்கிறது.