தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டர்: 5 லக்‌ஷர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை! - குல்கம்

Jammu kashmir encounter: ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தில் நடைபெற்ற பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் லக்‌ஷர் அமைப்பைச் சார்ந்த 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

By ANI

Published : Nov 17, 2023, 3:34 PM IST

Updated : Nov 17, 2023, 3:51 PM IST

ஜம்மு-காஷ்மீர்:பாக்கிஸ்தானைச் சார்ந்த பயங்கரவாத அமைப்பான லக்‌ஷர்-ஏ-தையிபா என்னும் அமைப்புடன் தொடர்புடைய, 5 பயங்கரவாதிகள், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்கம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சுடு தாக்குதலில் சூட்டுக் கொல்லப்பட்டதாகக் காஷ்மீர் மாநில ஐஜி விதி குமார் பேர்தி கூறியுள்ளார்.

இது குறித்து ஐஜி பேர்தி கூறுகையில், "குல்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியிலிருந்த வீடுகளில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்க தொடங்கியதை அடுத்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அதில் பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த பலியான 5 பேர் உடல் கண்டறியப்பட்டது" என்று தெரிவித்தார்.

மேலும் இச்சம்பவம் குறித்து காஷ்மீர் காவல் துறையினர் கூறும் போது, இந்த நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தனர். இருப்பினும் எல்லைப் பகுதிகளில், பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையேயான தாக்குதல் தொடர்வதாகக் கூறினர்.

அதேபோல், நேற்று (நவ.16) மதியம் குல்கம் மாவட்டம், சாம்னோ பாக்கெட் அடுத்த டி.எச்.போரா எனும் பகுதியில் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலின் போது, ராணுவ படையினர், காவல் துறையினர் மற்றும் மத்திய காவல் படையினர் ஆகியோர் ஈடுபட்டு இருந்ததாகவும் காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மத்திய பிரதேசம் தேர்தல்; இதுவரை 45.40 சதவீத வாக்குகள் பதிவு!

Last Updated : Nov 17, 2023, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details