பாட்னா:பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கந்தக் ஆற்றில் இன்று (ஆகஸ்ட். 17) படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி மாயாமாகினர்.
காவல் துறையினரின் முதல்கட்ட தகவலில், " இந்த விபத்து, குச்சாய்கோட் பகுதியைச் சேர்ந்த பத்து பேர், ராம்ஜீதாவில் நடைபெறும் விழா ஒன்றில் பங்கேற்க சென்றபோது நடைபெற்றது.
இதில், ஆகாஷ் குமார் (13), பவன் குமார் (10), பிரஜேஷ் குப்தா, புஷ்பா தேவி, ரஞ்சன் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஐந்து பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்தனர்.
பிகார் மாநிலத்தில், கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 18க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:காங்கோ நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் உயிரிழப்பு