டெல்லி: வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் புதன்கிழமை (ஜூலை 21) அதிகாலை 2.10 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.1 எனப் பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை மேற்கு கார்கோ மலைப்பகுதியில் உள்ள கிராம மக்கள் லேசாக உணர்ந்துள்ளனர். இதையடுத்து ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்தில் காலை 5.24 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.