புதுச்சேரி: புதுச்சேரி யூனியனில் மத்திய சிறைச்சாலை காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 200 க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் ஒன்பது தண்டனை கைதிகள் சிறைச்சாலை வளாகத்தில் இருந்த ஆணி மற்றும் பிளேடு விழுங்கியும், சாப்பாடு தட்டால் கைகளால் காயப்படுத்தியும் தற்கொலைக்கு முயன்றனர்.
இந்நிலையில் அலுவலர்கள் மிரட்டுவதாகக் கூறி மத்திய சிறைச்சாலையில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான சுனில், சுகன், ஜமாலுதீன், சத்யா உள்பட 5 பேர் ஆணி, பிளேடு உள்ளிட்ட கூர்மையான பொருள்களை முழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் 3 குற்றவாளிகளை மீட்டு காலாப்பட்டு பகுதியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்த காவலர்கள், மற்ற இருவரை சிறைச்சாலைக்குள் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
புதுச்சேரி சிறைச்சாலையில் கைதிகள் அதிகளவில் தற்கொலை முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : புழல் சிறையிலிருந்து டாஸ்மாக் ஊழியரை மிரட்டிய கைதி