காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்கு பொது பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் 2 வருடத்துக்கு எந்தக் கேள்வியும் இல்லாமல் சிறையில் வைக்கலாம். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வாரன்ட் தேவையில்லை. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய அவசியமில்லை. காவல் துறை ஆணையர் அல்லது மாவட்ட ஆட்சியர்களே இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துவிட முடியும். இச்சட்டத்தால் 18 வயதுக்குட்பட்டவர்களும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 430 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.