தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய ராணுவ அகாடமியில் புதிதாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் சேர்க்கப்படவில்லை! - இந்திய ராணுவம் தகவல்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்தபிறகு, இந்திய ராணுவ அகாடமியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சேர்க்கப்படவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Afghan
Afghan

By

Published : Jun 9, 2022, 2:12 PM IST

உத்தரகாண்ட்: ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிக்கும் வகையில், கடந்த 2011ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து ஆப்கன் ராணுவ வீரர்கள் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த ஆண்டு பயிற்சி பெற்று வெளியேறும் 377 வீரர்களில் 43 பேர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள். இந்த 377 வீரர்களும் நாளை மறுநாள் பயிற்சி முடித்து வெளியேறுகின்றனர்.

இதையடுத்து 288 புதிய வீரர்களுக்கு இந்திய ராணுவ அகாடமி பயிற்சி அளிக்கவுள்ளது. அதில், எட்டு நட்பு நாடுகளில் இருந்து 89 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெறவுள்ளனர். இதில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இல்லை என்றும், தற்போது வெளியேறும் 43 ஆப்கன் வீரர்கள்தான் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெறும் இறுதி பேட்ச் ஆக இருக்கலாம் என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தான் வீரர்கள் யாரும் இந்திய ராணுவ அகாடமியில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பப்ஜி விளையாட்டால் விபரீதம்... தாயைச் சுட்டுக் கொன்ற 16 வயது சிறுவன்...

ABOUT THE AUTHOR

...view details