கீவ் (உக்ரைன்):உக்ரைன் மீது ரஷ்யா இன்று (மார்ச்.1) 6ஆவது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டிலிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்த தாக்குதலில் இரு நாட்டின் தரப்பிலும் உயிர்ச்சேதம், பெருட்சேதம் கடுமையாக ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் கடுமையான தடைகளை விதித்து வருகின்றன.
இதையடுத்து, நேற்று (பிப்.28) பெலாரஸ் நாட்டில் ரஷ்யா-உக்ரைனிடையே 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைனின் கீவ் நகரில் தாக்குதல் நடைபெற்றது. கீவ் நகரை குறிவைத்து ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.