ஹோஷியார்பூர் (பஞ்சாப்):ஹோஷியார்பூர் மாவட்டம் ஷெர்பூர் டகோ கிராமத்தில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது, ஊழியர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
இருப்பினும் அவர்கள் பணியை நிறுத்தாமல், மழை நீருடன் சேர்த்து சாலை அமைத்தனர். இதை பொதுமக்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலானது.