தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மின்னல் தாக்கி நான்கு பேர் உயிரிழப்பு - district administration to provide monetary assistance

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஜமல்பூரில் மின்னல் தாக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.

மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு
மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

By

Published : Jun 6, 2021, 9:56 AM IST

மேற்கு வங்கத்தின் ஜமல்பூரைச் சேர்ந்த ஷம்புநாத் பேக் (52), ரஞ்சித் கோயலா (40), ஆதீர் மாலிக் (49), அரூப் பேக் (40) ஆகிய நான்கு பேர் நேற்றிரவு (ஜூன் 5) மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

ஜமல்பூரில் உள்ள பல இடங்களில் கடுமையாக மின்னல் தாக்கியது. அப்போது விவசாயம் செய்துகொண்டிருந்த, இந்த நான்கு பேர் மீது மின்னல் தாக்கியது.

உடனே அவர்கள் அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்ததை மருத்துவர் உறுதிப்படுத்தினார்.

இது குறித்து ஜமல்பூர் தொகுதி மேம்பாட்டு அலுவலர் சுபங்கர் மஜும்தார் கூறுகையில், "இன்று (ஜூன் 6) மாவட்ட நிர்வாகம் சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்குப் பண உதவி வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: மருந்து நிறுவனத்தில் தீ விபத்து: 4 பேர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details