ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ராவத் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் அருகே கேஸ் நிறுவனத்தின் வாகனமும் இருந்ததால், சுமார் 4 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததாக தெரிகிறது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பிறகு தீயில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில், 4 பேர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா தெரிவித்தார்.