பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள பிரபல தனியார் மருத்துமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இருந்த செட்டம்மா (30), மவுலாஹுசைன் (38), சந்திரம்மா (65), மனோஜ் (18) ஆகியோர் செப். 12ஆம் தேதி முன்பு உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதே முக்கிய காரணம். மருத்துவமனை நிர்வாகம் உயிரிழப்பு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டி மருத்துமனைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெல்லாரி போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், இந்த சம்பவத்தின்போது மின்சாம் துண்டிப்பு ஏற்பட்டது உண்மையே. ஆனால் அதற்கும் உயிரிழப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜெனரேட்டர் மூலம் நோயாளிகளின் வென்டிலேட்டருக்கு தடையில்லாமல் மின்சாரம் சென்றுகொண்டிருந்தது. அதே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பக்கத்து படுக்கைகளில் சிகிச்சை பெற்றுவந்தனர்.