போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் ஓம்காரேஷ்வர் பகுதியில் உள்ள கோதி கிராமத்தில் சாத்வி ரிதம்பராவின் பீதாம்பரேஷ்வர் ஆசிரமம் உள்ளது.
இந்த ஆசிரமத்தின் அருகே ஓம்காரேஷ்வர் அணையின் கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாயின் கரையில் ஒரு குளிக்கும் இடம் உள்ளது. இங்கு இன்று (ஏப்.20) காலை 6 மணியளவில் 6 சிறுமிகள் குளிக்கச் சென்றுள்ளனர்.
அவர்கள் அங்கு கரையில் கட்டியிருந்த சங்கிலியைப் பிடித்துக் கொண்டு குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுமி, அதீத நீரோட்டம் காரணமாக சங்கிலியை விட்டுவிட்டார். இந்த நிலையில் அவளை காப்பாற்ற மற்றொரு சிறுமி உள்ளே குதித்தாள்.