டெல்லி: தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க திமுக தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சாதக, பாதகங்கள் குறித்து ஆராய்ந்த அறிக்கையை நேற்று (ஜூலை 14) தமிழ்நாடு முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.
செப்டம்பர் 12ஆம் தேதி இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக்கோரி கோரிக்கை மனு அளித்தார்.