நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால், வட மாநிலங்களில் சிகிச்சை பலனின்றியும் போதிய ஆக்ஸிஜன் இல்லாமலும், பலர் உயிரிழந்து வருவதும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள கே.எஸ். மருத்துவமனையில் போதிய ஆக்ஸிஜன் இன்றி நான்கு பேர் உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நான்கு பேர் உயிரிழப்பு! - ஆக்ஸிஜன் பற்றகுறையால் நான்கு பேர் உயிரிழப்பு
கர்னூல்: மருத்துவமனையில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாததால் நான்கு நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தால் அங்க சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், ஆக்ஸிஜன் இன்றி உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து கர்னூல் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் அனுமதியின்றி கரோனா நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.