ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கான்போரா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்களை தீவிரவாதிகள் இன்று(ஜூலை.30) கையெறி குண்டுகளால் தாக்கினர். இந்த தாக்குதலில் ஒரு இளநிலை அலுவலர் உட்பட் நான்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.
பாரமுல்லா வெடிகுண்டு தாக்குதல் - 4 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம் - 4 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம்
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் நான்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.
4-crpf-men-civilian-injured-in-grenade-attack-in-j-and-ks-baramulla-ld
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ”இந்த குண்டு வெடிப்பில் துணை காவல் ஆய்வாளர், உள்பட நான்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் பாரமுல்லா பகுதியில் பதுங்கியுள்ளார்களா என தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இமாச்சலில் நிலச்சரிவு: மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை