ராஜஸ்தான் மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக, அம்மாநிலத்திலுள்ள மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
ஜெய்பூரில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 4 நோயாளிகள் உயிரிழப்பு!
ராஜஸ்தான்: ஜெய்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நான்கு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
4 நோயாளிகள் உயிரிழப்பு
மேலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க தற்போது மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மருத்துவமனையில் பலர் இறந்துவருகின்றனர்.
அந்தவகையில் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (ஏப். 27) ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நான்கு நோயாளிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.