தமிழ்நாடு

tamil nadu

ஆக்சிஜன் தட்டுப்பாடு? மகாராஷ்டிராவில் 4 பேர் மரணம்

By

Published : Apr 27, 2021, 9:11 AM IST

புனே: தனியாருக்குச் சொந்தமான வேதானந்தா மருத்துவமனையில் நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். அவர்களது உயிரிழப்பிற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என நோயாளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான வேதானந்தா கோவிட் மருத்துவமனையில் ஏப்ரல் 26ஆம் தேதி காலை 4 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அம்மருத்துவமனையில் அலட்சியமே காரணமென உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் நர்வேகர் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் அறுவை சிகிச்சை வல்லுநர்கள், இரண்டு மருத்துவர்கள் உள்ளனர். உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், "மருத்துவமனை உரிய நேரத்தில் ஆக்சிஜனை வழங்கத் தவறியதாலே உயிரிழப்பு ஏற்பட்டது" என்றனர்.

மகாராஷ்டிர மாநில வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜிதேந்திர அவத், பாஜக மாவட்டத் தலைவர் நிரஞ்சன் தாவ்கரே ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வுமேற்கொண்டனர். மேலும், அமைச்சர் ஜிதேந்திர அவத் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

எம்.என்.எஸ். வித்யார்த்தி சேனா மாவட்டத் தலைவர் சந்தீப் பச்சாங்கே, மருத்துவமனை நிர்வாகம் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தானே மாநகராட்சிக்குதி தகவல் தெரிவிக்கவில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details