ராஜ்சமந்த்:ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டம் அமேட் பகுதியில் ராச்செட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள பகாரியா பஸ்தியில் வசிக்கும் தேவலால் பகாரியாவின் 11 மற்றும் 9 வயது மகள்கள், அதேபோல் ஜகதீஷ் பகாரியா என்பவரின் 8 வயது மகன் மற்றும் 9 வயது மகள் ஆகிய நான்கு குழந்தைகள் நேற்று முன்தினம் (ஜூலை 13) அன்று வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்து உள்ளனர்.
அப்போது குளிப்பதற்காக அருகில் உள்ள குளத்திற்கு யாருடைய உதவியும் இன்றி சென்று உள்ளதாகத் தெரிகிறது. பின்னர், நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அப்பகுதியில் தேடத் தொடங்கி உள்ளனர். அப்போது குழந்தைகள் நீரில் முழ்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. பின்னர், அவர்களது உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க:ஆட்டோ ஓட்ட விடமால் தடுக்கும் கும்பல்.. கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் வேதனை!
இதனையடுத்து, உயிரிழந்த நான்கு குழந்தைகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனிடையே நேற்றைய முன்தினம் அன்று மதியம் குழந்தைகள் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.